குடும்ப தகராறு காரணமாக மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்
காலி - புஸ்ஸ மெடவல பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியின் இரு கால்களையும் துண்டித்துவிட்டு தப்பியோடிய சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக காலி பிரதிப்பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குடும்ப தகராறு காரணமாக இன்று (16) கணவன் இந்த குற்றச்செயலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது 34 வயதுடைய பெண் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பாடசாலையொன்றின் ஆசிரியை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் இராணுவத்தில் கடமையாற்றி 2018 ஆம் ஆண்டு முறையற்ற முறையில் வெளியேறியவர் எனவும், ரத்கம பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காலி மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரசிறியின் பணிப்புரையின் பிரகாரம், சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
