அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளியால் 116 பேர் பலி
அமெரிக்காவை கடுமையாக தாக்கிய ஹெலன் சூறாவளி புயல் கரையை கடந்துள்ளபோதிலும், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 116 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
ஹெலன் சூறாவளி புயல் கடந்த 26.09.2024 அன்று வலுவடைய ஆரம்பித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் தற்போது புயல் புளோரிடா பகுதியில் தாழ்வு நிலை அடைந்து கரையை கடந்த போதிலும் வெள்ளநிலைமை குறையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பாரிய அழிவு
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் புயலானது பாரிய அளவில் அழிவை ஏற்படுத்தி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சூறாவளியால் மணிக்கு 225 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியது என்றும் இதனால், பல வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்பாளர்களில் 20 இட்சம் பேர் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri