செம்மணி உட்பட ஈழத்தமிழர் நீதிக்காக உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்தமிழர்
நவநாதன் என்ற ஈழத்து தமிழ் அகதி ஒருவர் தமிழ்நாட்டின் திருச்சி சிறப்பு முகாமில் 8ஆவது நாளாக உண்ணாவிரதமிருந்து வருகிறார்.
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஒரு இனப்படுகொலை என்பதனை இந்திய மற்றும் தமிழக அரசுகள் ஆதாராப்படுத்தவேண்டும் உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 05.07.2025 ம் திகதி தொடக்கம் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்.
இந்நிலையில் அவரது உடல் உறுப்புகள் செயல் இழக்கும் அபாயத்தை எட்டியுள்ள போதும் இந்திய அரசு இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கூட தயாராக இல்லாது ஒரு மனித உயிரின் மகத்துவத்தை நினைத்துக்கூட பார்க்காத நிலையில் உள்ளது.
ஈழ போராட்ட காலத்தில் தனது குடும்பத்தை இழந்த நவநாதன் தமிழக மக்களின் மௌனம் கலையவேண்டும் எனவும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
காந்தியத்தை போதிக்கும் இந்தியா காந்தியின் அகிம்சைக்கோட்பாட்டை தலைகீழாக்கி தனது நகர்வுகளை இன்றுவரை கைக்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நவநாதனின் கோரிக்கைகள் இந்தியாவின் ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான ஏனைய விடயங்கள் தொடர்பிலும் முழுமையாக ஆராய்கிறது இன்றைய அதிர்வு..

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 20 மணி நேரம் முன்

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
