தனி நாடாக அதிக மனிதாபிமான உதவியை வழங்கிய நாடு
இலங்கையின் பொருளாதாரம், சமூகம் மற்றும் கடல் துறைகளின் முன்னேற்றத்திற்கு அவுஸ்திரேலியா உதவும் என அந்நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று முற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் நெருக்கடியை அவுஸ்திரேலியா புரிந்துக்கொண்டுள்ளது
இலங்கை எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அவுஸ்திரேலியா நல்ல புரிந்துணர்வுடன் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தனி நாடாக அதிகளவான மனிதாபிமான உதவியாக அவுஸ்திரேலியாவே 50 மில்லியன் டொலர்களை வழங்கியிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்திலும் ஏனைய துறைகளுக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் எனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான புரிந்துணர்வை வலுப்படுத்துதல்
கடற்படை மற்றும் சட்டவிரோத சட்டவிரோத குடியேற்றவாசிகள் சம்பந்தமாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன் அவுஸ்திரேலியாவின் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் டேவிட் ஹோலி மேலும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 21 மணி நேரம் முன்

உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கத் துவங்கிவிட்டது: பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள விவரம் News Lankasri

கமல் ஹாசன், ஸ்ரீதேவி ஒன்றாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று Cineulagam

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் குழந்தை லட்சுமியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ Cineulagam
