நெடுந்தீவில் இடம்பெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மக்கள் சந்திப்பு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நெடுதீவுக்கான களவிஜயம் நேற்று (28) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தை.தனராஜ் இன் தலைமையின் கீழ் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
ஆணைக்குழுவின் அதிகாரிகள்
இந்த களவிஜயத்தின்போது நெடுந்தீவு பிரதேச மக்களது மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை தொடர்பில் நெடுந்தீவிலுள்ள பொது அமைப்புகளிடமும் பொது மக்களிடத்திலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இந்த கள விஜயத்தின்போது நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச ஊழியர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பிலும் பொறுப்புடைமை தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இடம்பெற்றதுடன் நெடுந்தீவு பிரதேச வைத்திசாலைக்கும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் ஆராயப்பட்டது.
அத்துடன் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்துக்கும் கள விஜயம் மேகொள்ளப்பட்டது.
மேலும் இந்த கள விஜயத்தின் பொது பெற்றுக்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் அடிப்டையில் பொறுப்புவாய்ந்த அரச திணைக்கள பிரதானிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




