யாழில் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் வகையில் செயலமர்வு!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகமானது விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு, இந்த விழிப்புணர்வு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு செயலமர்வு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விழிப்புணர்வு செயலமர்வானது யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்காக 02.07.2025 அன்று மு.ப 09.00 முதல் 12.30 வரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடாத்தப்படவுள்ளது.
இந்த விழிப்புணர்வு செயலமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதான வளவளராக கலந்துக்கொண்டு கருத்துரை வழங்க உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
