தேர்தல் கால முறைகேடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள விடயம்
ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் முறைகேடுகளை கண்காணிக்கவும் அது குறித்த தகவல்களை பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, எந்தவொரு சார்பு அல்லது பாகுபாடும் அற்ற சட்டத்தின் சமமான பாதுகாப்பை, அனைவருக்கும் வழங்குவதற்கு இலங்கை பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, தேர்தலுக்கு அமைவாக பொலிஸ் மற்றும் ஏனைய அரச அதிகாரிகளால் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதாக மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நியாயமான தேர்தல்
இந்தநிலையில், பொதுமக்கள், தேர்தல் முறைகேடுகள் தொடர்பான தமது முறைப்பாடுகளை 0767914696 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 0112505566 தொலைநகல் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அத்துடன், தமது தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




