எவரெஸ்ட் சிகரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள்!
எவரெஸ்ட் சிகரத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு சிகரத்தை அடைய முயன்றபோது காணாமல் போன ஒருவரின் மனித எச்சங்களை ஆவணப்படக் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையைச் சுற்றியுள்ள பனி உருகிவருவதாகவும் இதனால் முன்னதாக எவரெஸ்ட் மலை ஏறும் முயற்சியில் உயிரிழந்தவர்களின் எச்சங்களை அடையாளம் காண முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித எச்சங்கள்
இதற்கமைய, சின் மற்றும் அவரது குழுவினர், ஒரு நேஷனல் ஜியோகிராஃபிக் ஆவணப்படத்திற்காக படமெடுக்கும் போது, 1924இல் சக ஏறுபவர் ஜார்ஜ் மல்லோரியுடன் காணாமல் போன சாண்டி என்று அழைக்கப்படும் ஆண்ட்ரூ காமின் இர்வினின் எச்சங்கள் என்று அவர்கள் நம்பும் ஒரு பூட்ஸைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து ஆய்வு செய்தபோது, அந்த காலனியின் உள்ளிருந்த காலுறையில் "ஏ.சி.இர்வின்" என்ற சிவப்பு லேபிள் இருந்துள்ளதாகவும், இது இந்த எச்சங்கள் இர்வினுடையது என்பதை வலுவாக குறிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஜூன் 8, 1924இல் எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியின் போது காணாமல் போன இர்வின் மற்றும் மல்லோரியின் நிலை பற்றிய புதிய நுண்ணறிவுகளை இந்த கண்டுபிடிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1999இல் ஜார்ஜ் மல்லோரியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டாலும், இர்வினின் எச்சங்கள் இருந்த இடம் இதுவரை அறியப்படாமல் இருந்துள்ளது.
சாதனை
இர்வின் குடும்ப உறுப்பினர்கள் எச்சங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த டி.என்.ஏ மாதிரிகளை வழங்கியுள்ளனர்.
இர்வின் மற்றும் மல்லோரி சிகரத்தின் உச்சியை அடைந்திருந்தால், 1953இல் எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே ஆகியோரின் பதிவு செய்யப்பட்ட ஏறுதலுக்கு முன்னதாக, அந்த சாதனையை படைத்தவர்களாக மாறியிருப்பார்கள்.
தற்போது கிடைத்துள்ள மனித எச்சத்தை ஆராய்ச்சி செய்வதன் மூலம் இர்வின் மற்றும் மல்லோரி சிகரத்தின் உச்சியை அடைந்தார்களா என்ற மர்மத்தை இறுதியாக தீர்க்க முடியும் என நம்பப்படுகின்றது.

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
