கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு: யாழ். பல்கலை மருத்துவ மாணவர்கள் வருகை (Video)
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் நேற்று முன்தினம் புதன்கிழமை (06.09.2023) அன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் இன்று (08.09.2023) தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் மற்றும், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணிகளான கேஸ்.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராசா ஆகியோர் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகளில் தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம் இணைந்து கொண்டுள்ளார்.
துப்பாக்கி சன்னங்கள்
குறித்த மனிதப் புதைகுழி இரண்டாம் நாள் அகழ்வாய்வின் போது துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள், துப்பாக்கிச்சன்னங்கள் துளைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆடைகள் தடைய பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழலில் குறித்த அகழ்வின் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகள் பெருத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளன.
அந்தவகையில் குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தை பார்வையிடுவதற்கென யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் வருகை தந்துள்ளனர்.
மேலும் குறித்த இடத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் பிரசன்னமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |













இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
