கொக்குத்தொடுவாய் மனித எச்சம் தொடர்பில் விசாரணை : சிரேஷ்ட சட்டத்தரணி விஜயம்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட இடத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணி இரத்தினவேல் நேற்று (04.07.2023) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் கடந்த (29.06.2023) அன்று மனித எச்சங்கள் சில இனங்காணப்பட்டிருந்தன.
கடந்த (30.06.2023) அன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
மனித எச்சங்கள்
இந்நிலையில் குறித்த மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில், எதிர்வரும் (06.07.2023) அன்று மேலதிக அகழ்வுகளை மேற்கொள்வதற்கு நீதிபதியால் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் குறித்த இடத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணி இரத்தினவேல் விஜயமொன்றை மேற்கொண்டு உள்ளார்.
மேலும் குறித்த விஜயத்தின் போது சட்டத்தரணி இரத்தினவேல் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
