கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துண்டிக்கப்பட்ட மனிதத்தலை..! பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பு - மொரட்டுமுல்ல, இஹல இண்டிபெத்த பகுதியில் உடலிலிருந்து அகற்றப்பட்ட மனித தலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மொரட்டுமுல்ல பொலிஸாருக்கு 119 என்ற அவசர எண்ணுக்கு இன்று (30) காலை சுமார் 8 மணியளவில் வந்த அழைப்பினையடுத்து சம்பந்தப்பட்ட தலை, உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் கொட்டகையொன்றிற்கு பின்னால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிதைந்த நிலையில் காணப்பட்ட மனித தலை
குறித்த கொட்டகையின் உரிமையாளரே இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, மொரட்டுமுல்ல பொலிஸார், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் ஆய்வு நடத்தியுள்ளார்.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட மனிதத்தலை, விலங்குகளால் உண்ணப்பட்டு மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இது குறித்து மொரட்டுமுல்ல பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO..
