வவுனியாவில் நீதி வேண்டி மாபெரும் கையெழுத்து போராட்டம்..!
வவுனியாவில் நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடமும் பன்னாட்டு சமூகத்திடமும் நீதி வேண்டி தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களில் மாபெரும் கையெழுத்து போராட்டமானது கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இறுதி நாளான நேற்றையதினம் (27) வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கையெழுத்து போராட்டம்
இதன்போது இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டு குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக கையொப்பம் இட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
குறித்த போராட்டமானது தாயகச்செயலணி எனும் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan
