இலங்கையில் கடன் அட்டைகளுக்கு பாரிய வட்டி - மௌனம் காக்கும் மத்திய வங்கி
கடன் அட்டைகளுக்கு 28 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதங்களை வணிக வங்கிகள் வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.
இதே வேளையில், இலங்கை மத்திய வங்கியும் நிதி அமைச்சகமும் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதால் 1.9 மில்லியனுக்கும் அதிகமான கடன் அட்டை வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம், மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி விகிதத்தை 8 சதவீதத்தால் பராமரிக்க முடிவு செய்தது.
வங்கி வைப்பு
மற்ற வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சில நேரங்களில் வங்கி வைப்புகளுக்கு 6 - 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
அவ்வாறான நிலையில் கடன் அட்டைகளுக்கு 28 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதங்களை அனுமதிப்பது அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கான பொதுமக்களின் ஆதரவை குறைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 20 மணி நேரம் முன்

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
