இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அதிருப்தி
நாட்டின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மனித உரிமை கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி விவகாரங்களில் இலங்கை உரிய தர நிர்ணயங்களை எட்டத்தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் விவகாரங்களில் நிலவி வரும் குறைபாடுகள் காரணமாக நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளது.
சமூக நீதி தொடர்பில் கவனம்
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமூக நீதி தொடர்பில் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
மாறாக மனித உரிமைகள் குறித்த சர்வதேச அவதானத்தை மூடி மறைப்பதற்கு முயற்சிப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் விமர்சனங்களை அடக்கவும், அடக்குமுறை சட்டங்களை அறிமுகம் செய்யவும் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
