வெள்ளை வான் கடத்தல் குறித்து விசாரிக்குமாறு சட்ட மா அதிபரிடம் கோரிக்கை
இலங்கையில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளை வான் கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது.
சட்ட மா அதிபரிடம் இது தொடர்பிலான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரும் ஹொரவத்பொத்தான பகுதியைச் சேர்ந்த கபில குமார டி சில்வா என்பவர் பலவந்தமாக கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கடத்தி இரகசியமாக இந்த நபர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி கபில குமார காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விசேட அதிரடிப்படையினரே தமது மகனை அழைத்துச் சென்றனர் என கபிலவின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
பின்னர் மார்ச் 29ம் திகதி விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கபிலவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
மனித உரிமை மீறல்கள்
பின்னர் ஏப்ரல் மாதம் 12ம் திகதி கபிலவை தாங்கள் தடுத்து வைக்கவில்லை என விசேட அதிரடிப்படையினர் அறிவித்தனர்.
எவ்வாறெனினும் ஏப்ரல் மாதம் 22ம் திகதி கபில பிட்டிகல பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயத்தை அறிந்து கொண்ட மனித உரிமை ஆணைக்குழு காலி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கபிலவை சந்தித்துள்ளனர்.
இதன் போது தம்மை பலவந்தமாக கடத்தியதாகவும் பொலிஸார் எனக் கூறிக்கொண்ட நபர்களே தம்மை கடத்தியதாகவும் வெள்ளை வானில் கடத்திச் சென்று தாக்கியதாகவும் கபில, மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 20ம் திகதி வரைியல் கபிலவை யார் தடுத்து வைத்திருந்தனர் என்பது குறித்து எந்தவொரு அரசாங்க நிறுவனமும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறான மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதனை தடுக்க வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழு சட்ட மா அதிபரிடம் கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காணாமல் போனதாக கூறப்படும் நபர் ஒர் கொலைக் குற்றச்செயல் சந்தேகநபர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri