மகிந்தவிடம் வாக்குமூலம் பெறுவது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவித்தல்
மகிந்தவின் வாக்குமூலம்
கோட்டகோகம மற்றும் மைனாகோகம அமைதிப் போராட்டத் தளங்கள் மீது மே 9ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெற்றதன் பின்னர், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை அழைக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
முன்னதாக, இன்று மகிந்த ராஜபக்சவை ஆணைக்குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய நிலைப்பாடு
சம்பவம் தொடர்பில் அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்தும் இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தும் மேலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்.
இதனையடுத்தே சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
