Google form தொடர்பில் இலங்கை பெண்கள் எச்சரிக்கை
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட பாலியல் தகவல்கள் இணையத்தில் பெறப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான பல்கலைக்கழகமொன்றின் பேராசிரியர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
பெண்களின் பாலியல் நடத்தை மற்றும் அணுகுமுறைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் போர்வையில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி மிகவும் தனிப்பட்ட பாலியல் தகவல்களைப் பெறுவதற்கு இணையத்தில் கூகுள் படிவம் (Google forms) ஒன்று பரிமாறப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், பல பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூகுள் படிவத்தின்படி தங்களின் மிகவும் தனிப்பட்ட பாலியல் தகவல்களைத் தெரிவித்துள்ளதாகவும், கூகுள் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
