அத்தாட்சிப்படுத்தல் சேவைகளுக்கான முன்பதிவு நியமன முறைமை
அத்தாட்சிப்படுத்தல் சேவைகளுக்கான முன்பதிவு நியமன முறைமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவினால் அறிமுகம் மின்னியல் சந்திப்பு நியமன முறைமையை எஸ்.எல்.டி. மொபிடெல் உடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளது.
இது கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் அத்தாட்சிப்படுத்தல் பிரிவில் சிறந்த மற்றும் பயனுள்ள சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்களுக்கு வசதியளிப்பதாக அமையும்.
மின்னியல் சந்திப்பு நியமன முறைமை
மின்னியல் சந்திப்பு நியமன முறைமையானது, கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம். திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறையில் உள்ள அதன் பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களில் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கான இணையவழி நியமனங்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதனை எளிதாக்கும்.
மின்னியல் முன்பதிவு சேவையைப் பெறும் வழி முறைகள்
1. கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் ஏற்படுத்தவதன் மூலம்.இலக்கம் 225 க்கு அழைப்பினை
02. நிலையான அழைப்புத் தொலைபேசி பாவனையாளர்கள் மற்றும் மொபிடெல் பாவனையாளர்கள் 1225இற்கு அழைப்பினை ஏற்படுத்தவதன் மூலம்.
03. www.echannelling.com - இணையம் மூலமான முன்பதிவு விண்ணப்பங்களுக்கு. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.mfn.gov.lk) ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும்.
சேவைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்களை கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு மற்றும் அதன் பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களின் அனைத்து அத்தாட்சிப்படுத்தல் பிரிவுகளும் 10.01.2025 நாளை வெள்ளிக்கிழமை முதல் கட்டாயமாக மின்னியல் சந்திப்பு நியமன முறைமை மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
