பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது..!

Tamils Sri Lanka General Election 2024 Parliament Election 2024
By T.Thibaharan Oct 14, 2024 10:38 AM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report

தென்னிலங்கை அரசியல் பொருளியலில் ஏற்பட்ட பெரு வெடிப்பு இலங்கை அரசியலில் அநுரகுமார என்றொரு அரசியல் சுனாமியை தோற்றுவித்திருக்கிறது. அது ஒரு மக்கள் ஒரு நாடு அனைவரும் சகோதரர்கள் என்ற கோசத்தோடு தென் இலங்கையில் இருந்து வட கிழக்கு நோக்கி பேரலையாகத் திரண்டு முன்னோக்கி நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ் மக்கள் தம்மை தேசமாக திரட்டி மக்கள் திரளாக நின்று அதனை எதிர் கொள்ள வேண்டும் ஆனால் தமிழர் தேசமோ கட்சிகளாக குழுக்களாக மதங்களாக பிரதேசங்களாக சாதியாகப் பிளவு பட்டு அரசியல் தலைமைகளுக்கு சீரழிந்து போய் கிடக்கிறது.

ஆயினும் இந்த சீரழிவில் இருந்தும் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு தமிழ் மக்களை ஒரு குடையின் கீழ் நிறுத்தி தென்னிலங்கையில் இருந்து வருகின்ற பேரலையை தடுத்து நிறுத்தக்கூடிய இறுதி வாய்ப்பு இன்னும் இருக்கிறது. 

கடந்த கால அரசியல் சீரழிவு

சுதந்திரம் அடைந்து கடந்த 76 ஆண்டுகளின் தென் இலங்கை அரசியல் செல்நெறி தற்போது மாற்றமடைய தொடங்கிவிட்டது. இந்த மாற்றத்தை தமிழர் தேசமும் அடைய வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது தோன்றி விட்டது.

சிங்கள தேசத்தில் சிங்கள தேசத்தின் பாரம்பரிய கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் மாற்றத்திற்கு ஏற்ப தம்மை மாற்றி அமைக்காததன் விளைவு அவை அழிந்து அவற்றிலிருந்து புதிய கட்சிகள் தோன்றி விட்டன.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது..! | How Tamil People Will Face The General Election

ஆனால் தமிழரசியல் பரப்பில் பழைய கட்சிகள் சிதைவடைந்து சீரழிந்து புதிய கூட்டுக்களும், புதிய கட்சிகளும் உருவாகி அவர்களும் சீரழிந்து சின்னா பின்னப்பட்டு போயிருக்கின்றனர். 

தமிழர் அரசியல் பரப்பில் அரசியலை முன்னெடுக்க வல்லமை வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் இருப்பதனை காணமுடிகிறது. அல்லது வல்லமை வாய்ந்த தலைமைகள் அரசியலின் முன்னிலைக்கு வர மறுக்கிறார்கள், அல்லது தவிர்க்கிறார்கள்.

கடந்த கால அரசியல் சீரழிவுகளில் இருந்து விரக்தியுற்று இளைய சமூகம் அரசியலைப் புறந்தள்ளி வெளியேறுகிறது. அவ்வாறே தலைமைத்துவ ஆளுமை மிக்க பெருமளவு இளைஞர் படை 30 ஆண்டுகால ஈழவிடுதலைப் போரில் ஈடுபட்டு இனத்திற்காக மரணித்தும் விட்டனர். மறுபுறம் பெருமளவில் புலம்பெயர்ந்தும் விட்டனர்.

ஆகவே தமிழ் மக்களிடம் இருந்த பலமான ஆளுமை மிக்க மனித வளம் சிதறிப்போய் சீரழிக்கப்பட்டு ஒதுங்கி இருக்கிறது அல்லது சிதறிக்கிடக்கிறது. இந்த நிலையில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பது என்பது மிகவும் சிக்கல் வாய்ந்ததாக இருக்கிறது. 

தமிழ் மக்களின் தேசிய அபிலாசை

ஆயினும் சீரழிவுக்கு உட்பட்டிருந்த தமிழ் தேசிய இனத்தை மீள்கட்டுவதற்கும், மீளொருங்கிணைப்பு செய்வதற்கும், தேசமாகத் திரண்டு நிற்பதற்கும் தமிழ் அறிவியல் சமூகம் தனது கடமையை ஆற்ற தவறவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை தேசமாக திரட்டுவதற்கும், தமிழ் மக்களை ஒன்று திரண்ட சக்தியாக காட்டுவதற்கும் எடுத்த முயற்சி சங்கு சின்னத்தின் கீழ் ஒருவரை குறியீடாக நிறுத்தி ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து அதே நேரம் அந்தத் தேர்தலையே தமிழ் மக்களை ஒருங்கிணைப்பதற்கான, தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை நிலை நிறுத்துவதற்கான, தமிழ் மக்கள் தேசமாக ஒன்று திரண்டு நிற்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி கணிசமான வெற்றியைப் பெற்றது உண்மைதான்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது..! | How Tamil People Will Face The General Election

கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகள் பெற்ற வாக்குகளின் 60 வீதமான வாக்குகளை இந்த பொது வேட்பாளர் பெற்றது என்பது தமிழ் மக்கள் மீண்டும் தங்களை சுதாகரித்துக் கொண்டு எழுந்திருக்க முடியும், தமிழ் மக்களை ஒன்று திரட்ட முடியும் என்பதற்கான ஒரு முன்னுதாரணமும் கூட. 

ஆகவே இந்த நடைமுறை சாத்தியமான, சாத்தியப்படுத்திய பயிற்சிக் களத்தை முன்னுதாரணமாகக் கொண்டு எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் தமிழ் மக்களை ஒரு திரட்சி பெறச் செய்து தமிழ் வாக்குகளை ஒன்று குவித்து அதிகப்படியான ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு இப்போதும் உண்டு. 

அது எவ்வாறெனில் இன்று இருக்கின்ற அரசியல் யாப்பின் தேர்தல் முறையில் விகிதாசார பிரதிநிதித்துவத்தில் உள்ள பட்டியல் முறையை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்த முடியும்.

இப்போது பொதுத்தேர்தலுக்கு பல கட்சிகளும், பல சுயேட்சைக் குழுக்களும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து போட்டியிடுகின்றன. அவர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தும் விட்டார்கள். ஆயினும் இப்போதும் கூட இவர்களை ஒன்று சேர்க்க வாய்ப்புள்ளது. 

18 ஆசனங்களுக்கு குறையாத வாக்குகள்

இன்று இருக்கின்ற தேர்தல் சட்டத்துக்கும், நடைமுறைக்கும் ஊடாக ஐக்கியப்படுத்துவதற்கான வாய்ப்பும், தேர்தலை ஒன்றாக நின்று வெல்லும் சாத்தியமும் இப்போதும் உண்டு.

எவ்வாறெனில் தேர்தல் போட்டிக் களத்துக்கு வந்திருக்கின்ற அனைவரையும் தமது போட்டியிலிருந்து வாபஸ் பெற வைத்து அதே நேரத்தில் இவர்களுக்கிடையிலான ஒரு ஐக்கியத்தை உருவாக்கி ஏதோ ஒரு சின்னத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தி அந்த சின்னத்துக்கு வாக்களிக்கும் படி மக்களை கோர முடியும். 

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது..! | How Tamil People Will Face The General Election

வாக்களிப்பு முறையில் ஒருவர் வாக்களிக்கின்ற போது தாம் விரும்பிய கட்சிக்கோ அல்லது சுயேச்சை குழுவினதோ சின்னத்துக்கு புள்ளடியிட்டு பின்னர் தாங்கள் விரும்பிய வேட்பாளரை விருப்பின் அடிப்படையில் தெரிவு செய்ய முடியும்.

இந்த நிலையில் இந்த விருப்பு வாக்கை அளிக்காமல் சின்னத்துக்கு மாத்திரமே வாக்களிப்பதன் மூலம் குறிப்பிடப்படுகின்ற அந்த சின்னத்துக்கான வாக்கின் தொகைளின் அளவினை ஒரே முறையில் திரட்டி குவிக்க முடியும்.

அவ்வாறு குறிப்பிட்ட சின்னத்துக்கு தமிழ் மக்கள் அனைவரையும் வாக்களிக்கும் படி அனைத்து தமிழ் வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட்டு வாக்குகளை ஒன்று குவித்தால் இன்றைய நிலையில் 18 ஆசனங்களுக்கு குறையாத வாக்குகளை ஓன்று திரட்ட முடியும். 

இவ்வாறு வாக்குகளை ஒன்று திரட்டியதன் பின் நாடாளுமன்ற பிரதிநிதிகளை பட்டியல் முறையின் கீழ் அனுப்ப முடியும். இந்தப் பட்டியலை முதல் ஒரு வருடத்திற்கு நாடாளுமன்றம் செல்பவர்கள் ஒரு வருடம் முடிவில் தாங்கள் இராஜினாமா செய்வதன் மூலம் பின்னே உள்ள பட்டியலில் இடம் பெறுபவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியும்.

இவ்வாறு தொடர்ந்து ஐந்து முறைகள் ஐந்து அணியினராக நாடாளுமன்றம் செல்வர் அப்படியானால் இந்த முறையில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து உதாரணமாக 18 ஆசனங்கள் கிடைக்கும் என்றால் ஒவ்வொரு வருடத்திற்கும் 18 உறுப்பினர்கள் சுழற்சி முறையில் செல்கின்றபோது ஐந்து வருடத்திற்கும் 90 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் சென்று வருவர்.

இது தமிழ் மக்கள் மத்தியில் புதியதொரு அரசியல் உத்தியோகத்தை தோற்றுவிக்கும். 

விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படை

இங்கே இந்த நடைமுறையை கையாள்வதில் பாதக விளைவு என்னவென்றால் யாருக்கு ஓய்வூதியம் பெறுவது என்பதுதான்.

மக்களின் நலன் சார்ந்தும், தமிழ் மக்களின் வாழ்வுரிமை சார்ந்தும், தமிழ் மக்களின் எதிர்காலம் சார்ந்தும் சிந்திப்பவர்கள்தான் இனத்திற்கான அரசியல்வாதிகளாக இருக்க முடியும்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது..! | How Tamil People Will Face The General Election

அவ்வாறே இவர்கள் இருப்பார்களேயானால் இந்த ஓய்வூதியம் அவர்களுக்கு தேவையற்றதாகிவிடும்.

அதனை அவர்கள் தியாகம் செய்ய தயாராகவும் இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக அரசியல் செய்ய வருகிறோம் என்று சொல்பவர்கள் தமிழ் மக்களுக்காக சில தியாகங்களை செய்ய வேண்டும் தானே? அவ்வாறு எதையும் தியாகம் செய்ய முடியாதவர்களை தமிழ் மக்கள் தங்கள் பிரதிகளாக ஏன் ஏற்க வேண்டும்?  

ஆகவே இப்போது இருக்கின்ற விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாக திரட்டுவதற்கும், தமது தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும் இத்தகைய ஒரு சுழற்சி முறையிலான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கையாள்வதன் மூலம் தமிழ் இனத்திற்கான அரசியலை புதிய பாதையில் வழிநடாத்த முடியும்.

இந்த வழிமுறையை கையாள்வதன் மூலம் அடையக்கூடிய பல்வேறுபட்ட நன்மைகளாவன 

1. தமிழர் மத்தியில் புதிய அரசியல் தலைமைகளை உருவாக்க முடியும்.

2. புதிய அரசியல் தலைமைகளுக்கான பயிற்சி பாசறையாக நாடாளுமன்றத்தை பயன்படுத்த முடியும்.

3 . பலருக்கு நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பை வழங்க முடியும்.

4 .  தமிழ் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வையும் அரசியல் செயற்பாட்டையும் வேகமாகவும், விவேகமாகவும் விஸ்தரிக்க முடியும்.

5.  அனைத்து தரப்பினரையும் அரசியலில் பங்காளிக ஆக்க முடியும். 

6.  பணம் பண்ணும் அரசியல் பண்பாட்டில் இருந்து தமிழ அரசியலை விடுவிக்க முடியும்.

7.  சோரம் போகும் அரசியல் தலைமைகளை தடுத்து நிறுத்த முடியும். அதற்கான வாய்ப்பையும் இல்லாத ஒழிக்க முடியும்.

8 .  தமிழ் மக்களிடையே உள்ள பல்வேறுபட்ட பிரிவினைகளையும், உடைவுகளையும், வேறுபாடுகளையும் களைந்தெடுக்க முடியும்.

9 . இலங்கை நாடாளுமன்றத்துக்குள் தமிழ் மக்களின் பல்வேறுபட்டவர்களின் பிரசன்னத்தால் சிங்கள தலைமைகளை நெருக்கடிக்குள் தள்ளிவைக்க முடியும். 

10 .சிங்கள தேசத்தின் நாடாளுமன்றத்தை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்த முடியும். அதே நேரத்தில் கேலிக்குள்ளாக்க முடியும். கேள்விக்குள்ளாக்கவும் முடியும்.

நன்மனம் படைத்த தமிழ் அரசியல் தலைமை

இவ்வாறு தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நலன்களையும் வாய்ப்புகளையும் பட்டியலிட முடியும்.

இத்தகைய நடைமுறையை கையாள்வதன் மூலம் இலங்கை அரசியல் யாப்புக்குள் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் நாடாளுமன்ற விவகாரங்கள் சார்ந்து பயிற்சி அளித்து அதனை சர்வதேச ரீதியான அரசியல் செயல்முறைக்கான அத்திவாரங்களை இட முடியும்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது..! | How Tamil People Will Face The General Election

இந்த நடைமுறையை கையாள்வதற்கு வழிவகைகள் உண்டு என்று சொல்லப்படுகின்ற போது இந்த கருத்தியல் பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம், வியப்புக்கு உள்ளானதாக கூட இருக்கலாம், சிலவேளை இது நடைமுறைக்கு எவ்வாறு சாத்தியப்படும் என ஐயப்பாடுகள் கூட தோன்றலாம், அல்லது இதனை ஒரு அழகான கற்பனை என்றும்கூட எண்ணத் தோன்றலாம்.

ஆனாலும் இதனைத் தமிழ் மக்களால் நடைமுறைப்படுத்த முடியும். நடைமுறைப்படுத்தி பரீட்சித்தப் பார்க்கலாம் என்ற ஒரு சிந்தனை நிச்சயமாக தோன்றும்.

அவ்வாறு ஒரு சிந்தனை மாற்றம் வந்தால் அது இந்தக் கருத்தியலை வலுப்படுத்தும்.முயன்றால் அனைத்தும் சாத்தியமே!. 

மேற்படி ஒரு குடையின்கீழ் வாக்கை குவிக்கும் இந்த நடைமுறையை கையாள்வதற்கு உரிய நிபந்தனை என்னவெனில் தமிழ அரசியல்வாதிகள் எனப்படுபவர்களுக்கு தமிழ் தேசியம் என்ற ஒற்றைத்தளத்தில் விருப்பு, வெறுப்புகள் மற்றும் சுய நலன்களைக் கடந்து இனத்தின் நலனே முதன்மையானது என்ற மனம் இருக்க வேண்டும்.

அந்த நன்மனமும், அறிவும், தியாக சிந்தனையும், தமிழ்த்தேசிய உணர்வும் கொண்டவர்கள் இருந்தால் மாத்திரமே இத்தகைய ஒரு அரசியல் செயற்பாட்டை நடைமுறைப்படுத்த முடியும்.

அத்தகைய நன்மனம் படைத்த தமிழ் அரசியல் தலைமைகளையே தமிழ் தேசிய அரசியல் வரலாறு தேடி நிற்கிறது, அவர்களின் வருகைக்காக தமிழினம் காத்துக் கிடக்கிறது.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 14 October, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, ஜெயந்திநகர், வவுனியா

24 Nov, 2019
மரண அறிவித்தல்

இலங்கை, கொழும்பு

07 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, உரும்பிராய், Ajax, Canada

13 Nov, 2021
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், மீசாலை சாவகச்சேரி, Kuala Lumpur, Malaysia

07 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொழும்பு

10 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

09 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bobigny, France

10 Nov, 2017
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொழும்பு, சிங்கப்பூர், Singapore

23 Oct, 2023
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, தெஹிவளை

08 Nov, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

06 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், காஞ்சிபுரம், India

04 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, கனடா, Canada

07 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி தெற்கு, Manor Park, United Kingdom

09 Nov, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

09 Nov, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நெடுங்கேணி, வவுனியா

10 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், Karlsruhe, Germany

05 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, Davos, Switzerland, Thusis, Switzerland

21 Oct, 2023
அகாலமரணம்

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புத்தளம், Scarborough, Canada

29 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Nigeria, Hayes, United Kingdom

26 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US