உட்கட்சி மோதலைச் சமாளிக்க முடியாமல் திண்டாடும் ஜனாதிபதி! சஜித்
அரச கூட்டுக்குள் உட்கட்சி மோதலைக்கூடச் சமாளிக்க முடியாமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திண்டாடுகின்றார் என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசில் அங்கத்துவம் வகித்துக் கொண்டு கூட்டுப் பொறுப்பை மீறும் வகையில் செயற்பட்டனர் எனக் கூறி விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரும் ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டுள்ளனர் என ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது. இந்த அரசை அரசுக்குள் இருப்பவர்களே வெறுக்கத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகவே விமல், கம்மன்பிலவின் அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியால் பறிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அனுமதியின்றி இருவரும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.
எனவே, அரசுக்குள் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். மக்கள் அனைவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களை மென்மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
நாட்டை நேசிக்கும் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சி விரைவில்
மலர ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 1 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri