ஏமனில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணியாளர்களை கைது செய்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
தமது கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்தின் பிரதமரை இஸ்ரேல் கொலை செய்தமையை அடுத்து, ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஏமன் தலைநகர் சனாவில் அமைந்துள்ள இரண்டு ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களின் அலுவலகங்களைத் தாக்கியுள்ளனர்.
உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் நிறுவனம் ஆகியவற்றின் அலுவலகங்களுக்குள் நேற்று(31) காலை கிளர்ச்சியாளர்கள் பிரவேசித்து இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
கிளர்ச்சியாளர் குழுவால் தடுத்து வைக்கப்பட்ட
இதன்போது இரண்டு நிறுவனங்களில் இருந்தும் பல பணியாளர்களை கிளர்ச்சியாளர்கள் கைது செய்து அழைத்துச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஏமனுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் ஹான்ஸ் கிரண்ட்பெர்க், தமது பணியாளர்களில் குறைந்தது 11 பேர் கிளர்ச்சியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தியுள்ளார்,
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஹவுதிகளின் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்துள்ளார்.
கிளர்ச்சியாளர் குழுவால் தடுத்து வைக்கப்பட்டவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



