பௌத்த துறவிகளின் பெற்றோருக்காக பிரதமரால் ஒதுக்கப்படும் பாரிய வீட்டுத்திட்டம்

Housing project
By Independent Writer Feb 08, 2021 11:20 PM GMT
Report

மிஹிந்து நிவஹன திட்டம் பௌத்த துறவிகளின் பெற்றோருக்கு மாத்திரமன்றி முழு சாசனத்திற்கும் நிழல் தரும் ஒரு திட்டமாகும் எனப் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.

சியாம்பலாண்டுவ புத்தம புரான ரஜமஹா விகாரையில் நடைபெற்ற 'மிஹிந்து நிவஹன'திட்டத்தின் ஆரம்ப விழாவில் பிரதமர் மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்காக தமது குழந்தைகளைச் சாசனத்திற்குத் தியாகம் செய்த பெற்றோரின் நினைவாக, இந்த மிஹிந்து நிவஹன' திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த திட்டம் தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் பௌத்த விவகாரம் தொடர்பான திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. ஹெவன்வெரவ கிராமத்தின் புத்தம கோசள மற்றும் புத்தம நந்தரதன தேரர்களின் பெற்றோரான டீ.எம்.சீலவதி மற்றும் கிரிபண்டா ஆகியோருக்காக நிர்மாணிக்கப்படும் 'மிஹிந்து நிவஹன' விற்கான அடிக்கல் இராஜாங்க அமைச்சர்களான ஷஷீந்திர ராஜபக்ஷமற்றும் இந்திக அநுருத்த ஆகியோரினால் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது பிரதமரினால் இத்திட்டத்தின் சன்னஸ் பத்திரம் இலங்கை ராமஞ்ஞா மஹாநிகாயவின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய மகுலேவே ஸ்ரீ விமல தேரரிடம் கையளிக்கப்பட்டது.

முதல் கொடுப்பனவு காசோலைகளைப் பயனாளிகளுக்கு வழங்குவதை அடையாளப்படுத்தும் வகையில், பிரதமர் முதல் கொடுப்பனவு காசோலைகளைப் பயனாளிகளான என்.எம்.விஜேகோன் பண்டா, பி.ஆர்.எம் குணசேகர மற்றும் ஏ.எம்.சோமசிரி ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.

குறித்த நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, நம் நாட்டின் வரலாற்றில் பௌத்த சாசனத்திற்கு இதுபோன்ற புண்ணிய நிகழ்வு நிகழ்த்தப்பட்டதில்லை என்று நினைக்கிறேன்.

இந்த பாரிய வீட்டுத்திட்டத்தை எங்கள் பௌத்த துறவிகளின் பெற்றோருக்காக ஒதுக்குகிறோம். இந்த திட்டத்திற்கு 'மிஹிந்து நிவஹன' திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்குப் பௌத்தத்தைக் கொண்டு வந்த மாபெரும் மிஹிந்து தேரரின் நினைவாக இந்த வீட்டுத் திட்டத்திற்கு நாங்கள் பெயரிட்டுள்ளோம்.

இந்த பெயரை வைப்பதற்கான காரணத்தை விளக்கியதற்கான காரணம் ஏனெனில் இது மிக முக்கியமான விடயம். சில நேரங்களில் மிஹிந்து எனக் குறிப்பிட்டவுடன் சிலர் மஹிந்த என்று எண்ணக்கூடும்.

எனது பெயரும் அது என்றபடியால். 2015 ல் நாங்கள் தேர்தலில் தோல்வியுற்று வீட்டிற்குச் சென்றபோது எனக்கு நினைவிருக்கிறது, நல்லாட்சி அரசாங்கம் எங்கள் பெயரில் உள்ள அனைத்தையும் பழிவாங்கியது. நாங்கள் ஆரம்பித்த அபிவிருத்தி நடவடிக்கைகளை அவர்கள் நிறுத்தினர்.

புத்தமபோன்று பல கஷ்டப் பிரதேசங்களில் ஆரம்பித்த வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அவர்கள் நிறுத்தினர். அது மட்டுமல்லாமல், இந்த பகுதிகளுக்கான திட்டமிடப்பட்ட அபிவிருத்தி நல்லாட்சியின் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினோம். உங்கள் கிராமத்திற்குச் செல்லும் வீதிகளை மீண்டும் உருவாக்கத் தொடங்கினோம். உங்கள் நீர்ப் பிரச்சினையையும் நாங்கள் தீர்ப்போம். மஹிந்தோதய ஆய்வகங்களின் பலகைகளை அகற்றியது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கான திட்டத்தையும் நிறுத்தினர்.

எனவே, இங்கே 'மிஹிந்து' என்பது ஒரு பெரிய நாகரிகத்திற்கு அடித்தளம் அமைத்த மிஹிந்து தேரரின் நினைவாக வழங்கப்பட்ட பெயரென்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்லாமல், முந்தைய நல்லாட்சி அரசாங்கம் பெருமளவில் பௌத்த சாசனத்தையும் பழிவாங்கியது. தலதா பெரஹரவின் போது யானைகளை வழங்குவதையும் மட்டுப்படுத்தியது. தற்போது இதனைப் பலரும் மறந்து போயுள்ளனர். அது மாத்திரமின்றி பெரஹராவில் ஈடுபடுத்தப்பட்ட யானையை எப்.சி.ஐ.டி. க்கும் அழைத்து சென்றனர். தம்புள்ள ரஜமஹா விகாரையின் உண்டியலுக்குச் சீல் வைத்தனர். இவ்வாறானதொரு யுகத்தைக் கடந்து நாம் தற்போது அதனை மாற்றி வருகின்றோம்.

அன்று பௌத்த துறவிகளுக்குச் சிறைக் கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்தை மாற்றி இன்று பௌத்த துறவிகளின் பெற்றோருக்கு நிழல் தரும் வீடமைப்பு திட்டத்தைச் செயற்படுத்த ஆரம்பித்துள்ளோம்.

இத்திட்டத்திற்காக இவ்வாண்டில் 12 ஆயிரம் இலட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளோம். இந்நிதியைக் கொண்டு 2000 வீடுகளை அமைக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். துறவிகளுக்கு வழங்குவது என்பது நாட்டிற்கு வழங்கப்படும் ஒன்றாகவே நாம் பார்க்கின்றோம்.

அவர்களுக்கு வழங்கப்படுவதை ஒரு சுமையாகக் கருதுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. இந்த நாட்டின் எதிர்காலம் மற்றும் தேசத்திற்கான முதலீடாக நாங்கள் இதனைக் கருதுகிறோம்.

சாசனத்தில் துறவிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இளம் துறவிகள் துறவற வாழ்க்கையிலிருந்து வெளியேறுவது இன்று இந்த நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்று நான் நம்புகிறேன். இவ்வாறு துறவு வாழ்க்கையிலிருந்து

விடுபடுவதற்குக் காரணம் தமது பெற்றோருக்குத் தங்குவதற்கு ஒருவீடேனும் இல்லை. எமக்கு ஒரு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தாருங்கள், எமது பெற்றோரைக் கவனித்துக் கொள்வதற்கு என இளம் துறவிகள் கூறுகின்றனர். இது தொடர்பில் மஹாநாயக்க தேரர்களும் பொறுப்பு வாய்ந்த அனைத்து துறவிகளும் என்னிடம் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளனர்.

இன்று ஒரு குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும் போது சாசனத்திற்கு ஒரு குழந்தையைத் தியாகம் செய்வது என்பது மிகவும் கடினம். இதுபோன்ற சூழ்நிலையில் தங்கள் குழந்தைகளைச் சாசனத்திற்குத் தியாகம் செய்யும் பெற்றோருக்கு எங்கள் மரியாதையைச் செலுத்த வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்.

ஒரு குடும்பத்தில் குழந்தைகள் குறைவாக இருக்கும் சந்தர்ப்பத்தில் சாசனத்திற்குச் செல்லும் பிள்ளைகளும் பெற்றோரைக் கவனித்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்படும். அத்துறவிகளின் அந்த சுமையைக் குறைக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.

அதற்காகவே நாம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்.நாங்கள் தேரர்களின் ஆலோசனையை எப்போதும் ஏற்றுக் கொள்ளும் அரசாங்கம் என்பதை நீங்கள் அறிவீர்கள். முந்தைய அரசாங்கத்தைப் போல அல்ல. நாங்கள் உருவாக்கிய ஒவ்வொரு அரசாங்கமும் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டன. மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட, நாம் நாட்டின் நலன் கருதி தேரர்கள் வழங்கிய ஆலோசனையை ஏற்றுக்கொண்டோம். நாட்டின் சுதந்திரத்திற்குத் தடையாகவிருக்கும் எந்தவொரு நாங்கள் ஒருபோதும் உருவாக்க மாட்டோம். அவ்வாறு செய்ததுமில்லை.

இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் சக வாழ்வை 30 ஆண்டுகளாக அழித்த எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தோம். அமைதி நிலைநாட்டப்பட்டது. அபிவிருத்தி தொடங்கியது.அதன்பின்னர், நல்லாட்சியின் காலத்தில் நீங்கள் நினைவில் வைத்திருக்கும் அமைதியைக் கொண்டுவருவதில் கருவியாக இருந்த போர்வீரர்கள் மீதான ஜெனீவா தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அதை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.இந்த நாட்டில் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனைத்து திட்டங்களும் தயாராக இருந்தன.

இது மக்களுக்கு நில உரிமை மற்றும் இந்த நாட்டில் வாழும் உரிமையைப் பறிக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் எம்.சி.சி ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் விலகினோம்.நாங்கள் எங்கள் நாட்டின் உரிமைகளை மக்களுக்கு வழங்கும் அரசாங்கம். இதனைத் தேரர்கள்போன்றே நாட்டை நேசிக்கும் மக்களும் மனதில் கொள்ள வேண்டும். அரசாங்கம் எத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும், நாட்டின் சுதந்திரத்திற்காகத் தைரியமான முடிவுகளை எடுத்துள்ளோம்.

எனவே, நாட்டை நேசிக்கும் துறவிகள், மதத்தலைவர்கள் மற்றும் அனைத்து மக்களும் இந்த அரசாங்கத்தில் எங்களுடன் நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க பாரிய முடிவுகளை எடுத்த குழு நாங்கள்.உங்கள் ஆதரவு மற்றும் புரிதலுடன் மட்டுமே நாங்கள் அவர்களை முன்னோக்கி நகர்த்தமுடியும்.

மக்கள் எங்களை நம்பி எங்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள். நாங்கள் உருவாக்கிய ஒவ்வொரு அரசாங்கமும் மக்களின் நம்பிக்கையைப் பாதுகாத்தது. உங்கள் நம்பிக்கையை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

அன்று மிகவும் கஷ்ட பிரதேசமாக விளங்கிய கிராமங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்தக்கிராமம் தற்போது அந்த கஷ்டத்திலிருந்து ஓரளவிற்கு மீண்டெழுந்துள்ளது.

ஒரு வீதியுள்ளது. மின்சாரம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் மஹா சங்கத்தினர், இராஜாங்க அமைச்சர்களான ஷஷீந்திர ராஜபக்ச, இந்திக அநுருத்த, விஜிம பேருகொட, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஷ்பகுமார, குமாரசிறி ரத்நாயக்க, ஊவா மாகாண ஆளுநர்ஏ.ஜே.எம்.முசம்மில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.  

GalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US