வியத்புர வீடமைப்புத்திட்டத்தின் கீழ் அரசியல்வாதிகளுக்கு வீடு : வெளியான தகவல்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல்வாதிகளுக்கான நலத்திட்டங்களை வழங்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி கோட்டா கோ கம தாக்குதல் சம்பவத்தையடுத்து நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட வன்முறைகளின் போது பல அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
ஜனாதிபதி ஆலோசணை

தீக்கிரையாக்கப்பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட வீடுகளுக்குப் பதில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆடம்பர வீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு அண்மையில் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதனையடுத்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் வியத்புர வீடமைப்புத்திட்டத்தில் அவர்களுக்கான வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan