கிளிநொச்சியில் பெருமளவான போதைப்பொருளுடன் குடும்பப்பெண் கைது
கிளிநொச்சி- மயில்வாகனபுரம், கொழுந்துப்பிலவு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் குடும்பப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(30) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது.
கைது
இதன்போது, வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் 79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவினை தர்மபுரம் பொலிஸார் மீட்டுள்ளதுடன் வீட்டு உரிமையாளரான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர் விசுவமடு கொழுந்து புலவு பகுதியை சேர்ந்தவர் 55 வயதுடைய பெண்ணாவார்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
மேலும், கைது செய்யப்ட்ட பெண், தடையப் பொருட்கள் நாளைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M.S.J . திஸ்ஷநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் ,குறித்த கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
