தீக்கிரையான தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள்: 3 வருடங்களாக மண்டப வாழ்க்கை
இருநூறுக்கும் மேற்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் வீடுகள் எரிந்தமையால் தமது வாழ்விடங்களை இழந்த நிலையில் மூன்று வருடங்களாக பொது சனசமூக மண்டபத்தில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தீக்கிரையான வீடுகள்
தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் 24 தொழிலாளர் குடும்பங்கள் குடியிருந்த லயன் அறைகள் மின் கசிவு காரணமாக முற்றாக எரிந்து நாசமானது.
இந்த 24 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட, எந்த வசதியும் இல்லாத அப்பகுதியின் பொது கலாச்சார மண்டபத்தில், மே 29, 2019 முதல் வசித்து வருகின்றனர்.
அரசாங்கத்திடம் கோரிக்கை
பாதிக்கப்பட்ட இந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு மூன்று வருடங்களாக மாற்று வீடுகள் வழங்கப்படவில்லை, 2021ஆம் ஆண்டில் அவர்களுக்கான வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, ஆனால் அது பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தத் தோட்டத்
தொழிலாளர்கள், அடிப்படை வசதிகளுடன் கூடிய தகுந்த குடியிருப்பை ஏற்படுத்தித்
தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam

அடுத்தவர் வாழ்வை நாசமாக்க.... சிம்புவுடனான உறவு பற்றி திருமண வீடியோவில் மனம் திறந்த ஹன்சிகா News Lankasri
