மட்டக்களப்பில் விசேட தேவை உடையோருக்கு நிர்மாணிக்கப்பட்ட 3 வீடுகள் கையளிப்பு
மட்டக்களப்பில் நலிவுற்ற மற்றும் விசேட தேவை உடைய மக்களின் நலன் கருதி நிர்மாணிக்கப்பட்ட 3 வீடுகள் பயனாளிகளிடம் மட்டக்களப்பு நலிவுற்றோருக்கான தனியார் அமைப்பினால் கையளிக்கப்பட்டுள்ளது.
பெரிய பிரித்தானியா லண்டனை மையமாக கொண்டு இயங்கும் குறித்த தனியார் அமைப்பின் இலங்கைக்கான கிளையான மட்டக்களப்பை மையமாக கொண்டு இயங்கும் அமைப்பு என்பன இணைந்து இத்திட்டத்தினை மேற்கொண்டுள்ளன.
இடம்பெற்ற நிகழ்வுகள்
இந்த அமைப்பின் திட்டத்தில் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 7 வீடுகள் நிர்மாணிக்கபட்டு வரும் நிலையில் முதல்கட்டமாக நிர்மாணிக்கபட்ட 3 வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகள் அந்தந்த பிரதேசங்களில் இடம்பெற்றன.
இதில் அதிதிகளாக அமைப்பின் தலைவர் ஹெலன் கங்காதரன், இணைப்பாளர் பிறிற்டே ஜெயகுமார், மட்டு கிளை செயலாளர் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மொறக்கொட்டான் சேனையிலும், உன்னிச்சை நெடியமடுவிலும், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்தில் நிர்மாணிக்கபட்ட 3 வீடுகளையும் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தனர்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 21 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
