திருகோணமலையில் கடலறிப்பால் வீடுகள் சேதம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
திருகோணமலை - பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீர நகர் கரையோர பகுதியில் கடும் சீரற்ற கால நிலை காரணமாக வீடுகள் கடலுடன் தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(05.01.2026)இடம்பெற்றுள்ள நிலையில், மூன்று வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தாழிறங்கிய வீடுகள்
தாழிறங்கிய வீடுகளில் வசிக்கும் 19 பேர் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடல் அலையின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் குறித்த வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான சீரற்ற கால நிலை மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் உரிய அதிகாரிகளிடத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
இதற்கமைய, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஊடாக கலந்துரையாடி உரிய நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam