யாழில் மின்னல் தாக்கத்தினால் ஒரு வீடு சேதம்!
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தால் வீடு சேதமடைந்ததுடன், வீட்டில் இருந்தவர்கள் எந்தவித காயங்களும் இன்றி உயிர்தப்பியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று (06.04.2026) அதிகாலை பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மின்னல் தாக்கம்
வடமராட்சி - கெருடாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அருகில் இருந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் அந்த மரம் தீப்பற்றியுள்ளது. மேலும் மின்னல் தாக்கத்தால் வீட்டின் சுவர்களில் ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன், வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவு நிலைகளும் சேதமடைந்த நிலையில், வீட்டில் இருந்தவர்கள் எந்தவித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.
மின்னல் தாக்கத்தால் தென்னை மரம் தீப்பற்றி எரிவதை கண்ட அயலவர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர்.
இதற்கிடையில், குறித்த மின்னல் தாக்கத்தால் அயலவர்களின் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட சில இலத்திரனியல் பொருட்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

