வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தும் குழுவினர்
நாடளாவிய ரீதியில் தற்போது எரிவாயு கொள்கலன்கள் மற்றும் எரிவாயு அடுப்பு ஆகியன வெடித்துச் சிதறிவருவதுடன் இதன் காரமணாக பொதுமக்கள் பெரும் அச்சத்தில் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழு தமது சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் எரிவாயு தொடர்பான வெடிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக எட்டு பேர் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி கடந்த 30ஆம் திகதி நியமித்தார்.
அதன்படி, குழு உறுப்பினர்கள் பொலிஸாருடன் இணைந்து சம்பவங்கள் பதிவான வீடுகளுக்குச் சென்று சோதனைகளை மேற்கொண்டதாக தெரியவருகின்றது.
கொட்டாவ, அதுருகிரிய, ஹன்வெல்ல போன்ற பிரதேசங்களில் அண்மையில் எரிவாயு வெடித்ததாகக் கூறப்படும் வீடுகளுக்குச் சென்று அவர்கள் தகவல்களைப் பதிவு செய்துக் கொண்டுள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri