பிரித்தானியாவில் வீடுகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் பிரித்தானியாவில் வீடுகளின் விலையில் 0.1 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர்களின் கணிப்பின் படி ஒக்டோபரில் 0.3 சதவீத அதிகரிப்பு பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 0.1 சதவீத அளவிலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஒக்டோபரில் வீடுகளின் விலைகள் 2.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.
வட்டி வீதம் குறைவு
பிரித்தானியாவில் வட்டி வீதங்கள் குறையும் பட்சத்தில் வீட்டு சந்தை நிலைத்தன்மையுடன் இருக்கும் எனவும் கடன் செலவுகள் குறைவதால் வீடு வாங்கக்கூடிய இயலுமை அதிகரிக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
எதிர்வரும் வாரங்களில் இங்கிலாந்து வங்கியினால் வட்டி வீதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதோடு இது எதிர்வரும் வருடத்தில் மேலும் குறைவடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, செப்டெம்பர் மாதத்தில் வீடுகளின் விலையில் 0.6 சதவீத அதிகரிப்பு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |