நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி வீரசிங்கவின் வீடும் மக்களால் எரிப்பு (Photos)
அம்பாறை தமண பொலிஸ் பிரிவிலுள்ள கல்கந்த பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி வீரசிங்கவின் வீடும் மக்களால் எரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பூராகவும் இடம்பெற்று வருகின்ற போராட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் நேற்று இரவு குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் வீடு மக்களினால் எரிக்கப்பட்டுள்ளது.
இவ் நாடாளுமன்ற உறுப்பினர் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி இணைத்தலைவரில் ஒருவருமானவார்.
இதே வேளை திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக விமலவீர திசாநாயக்கவும் வைத்தியர் திலக் ராஜபக்சவும் நாடாளுமன்ற உறுப்பினராக டபிள்யு.டி வீரசிங்கவுடன் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
2020 நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன – 1 லட்சத்து 26ஆயிரத்து 012 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகியமையை கொண்டாடும் முகமாக நிந்தவூர் மஸ்ஜிதுர் ரஹ்மானியா பள்ளிவாசல் மஹல்லா வாசிகளால் கஞ்சி - பாயாசம் செய்து மக்களுக்குப் பருக கொடுக்கப்பட்டது.

இன்று காலை ரஹ்மானியா பள்ளிவாசலுக்கு முன்னால் அப் பள்ளிவாசல் மஹல்லா நலன் விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் போது வீதியால் பயணித்த மற்றும் மஹல்லாவாசிகள் முதலானோருக்கு பாயாசம் வழங்கி வைக்கப்பட்டன.
இவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஒரு மாதகாலமாக மக்கள் போராட்டம் இடம்பெற்றுவந்த நிலையில் ஆளுங்கட்சியினரால் நேற்று வன்முறையைக் கட்டவிழ்த்து விடப்பட்டதுடன் அவர் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam