கொழும்பில் இடம்பெற்ற மோதல் சம்பவம்:பரபரப்பை ஏற்படுத்திய காணொளி (Video)
கொழும்பு –பம்பலபிட்டி பகுதியிலுள்ள தமது ஆடை விற்பனை நிலையத்தில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஹவுஸ் ஆஃப் பேஷன் நிறுவனம் தெளிவூட்டல்களை வழங்கியுள்ளது.
"தமது வாகனம், வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், மற்றுமொரு வாகனம் இடைமறிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர், நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் முறையிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் PA கட்டமைப்பின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இடைமறித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் உரிமையாளர்கள், தமது வாகன தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு, வேறொரு இடத்திற்கு சென்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குறித்த வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நோக்கி தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டதுடன், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு தமது ஊழியர்கள் முயற்சித்துள்ளனர்” என ஹவுஸ் ஆஃப் பேஷன் ஆடை விற்பனை நிலையத்தின் முகாமைத்துவம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான முழுமையான காணொளியை ஹவுஸ் ஆஃப் பேஷன் வெளியிட்டுள்ளது.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
