திருகோணமலையில் தீக்கிரையான வீடு
திருகோணமலை -மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலத்தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்று தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (26) பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீட்டு உரிமையாளர்கள் பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள வாய்க்காலுக்கு குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்தநிலையில் அவர் குளித்து விட்டு வீடு வந்து பார்த்தபோது வீடு தீப்பற்றி எரிவதை கண்டுள்ளனர்.
இதன் பின்னர் வீட்டு உரிமையாளர்களும், வீதியால் பயணித்த பொதுமக்களும் இணைந்து தீயினை கட்டுப்படுத்த முனைந்தபோதும் வீட்டின் பெரும்பகுதி தீக்கிரையாகியுள்ளது.
அத்தோடு வீட்டில் காணப்பட்ட குளிர்சாதனப்பெட்டி,மின்சார உபகரணங்கள், வீட்டுத்தளபாடங்கள்,சுய கோவைகள் என்பனவும் தீயினால் சேதமாகியுள்ளன.
இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டதென இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
