திருகோணமலையில் விடுதி உரிமையாளர் கொடூரமாக கொலை
திருகோணமலை சிங்கபுர பகுதியில் விடுதியொன்றின் உரிமையாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 55 வயதுடைய பி.கே. நிமல் கொஸ்கொல்ல என்ற திருமணமாகாத நபர் என தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை
சம்பவம் நடந்த போது குறித்த விடுதியில் யாரும் தங்கியிருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்த நபரின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பிலான நீதவான் பரிசோதனை இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல அரசியல்வாதியொருவரை கொலை செய்ய இரகசிய பணிப்புரை வழங்கிய மகிந்த - வெளிப்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்