இயக்கச்சி றீச்சாவில் புதுப்பொலிவுடன் திறக்கப்படும் முல்லை ஓய்வகம் மற்றும் தேவாலயம்!(Photos)
பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm).
இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள முல்லை ஓய்வகம் (Hotel - Mullai) மற்றும் றீச்சா தேவாலயம் (reecha Church) என்பன இன்று(11.04.2023) திறந்து வைக்கப்படவுள்ளது.
றீச்சா தேவாலயம், முல்லை ஓய்வகம்
இன்றைய தினம் (11.04.2023) காலை 11 மணியளவில் றீச்சா தேவாலயமும், மதியம் 12 மணியளவில் முல்லை ஓய்வகம் எனும் பெயரில் 35 அறைகளுடன் கூடிய விடுதியும் திறந்து வைக்கப்படவுள்ளது.
முல்லை ஓய்வகத்தினை ராசையா ரஞ்சித் லியோன் (லண்டன்) திறந்து வைக்கவுள்ளார்.
றீச்சா தேவாலயத்தை அருட்தந்தை அன்புராசா, அருட்தந்தை ஜெயந்தன் மற்றும் அருட்சகோதரர் ஜெனிஸ்ரன் ஆகியோர் திறந்து வைக்கவுள்ளனர்.
மேலும், ஓரிரு வாரங்களுக்கு முன்னர் காளி கோயில் ஒன்றும் அங்கு வரும் மக்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


