பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
வெப்பமான காலநிலையை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் மதிய வேளையில் குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடுத்துதல் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டு விழாக்களை நடத்துதல் குறித்தும் இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிபர்களுக்கு அறிவிப்பு
இது தொடர்பான மேலும் பல பிரச்சினைகள் குறித்து அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளுக்கு அதிக வெப்பத்துடனான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், வட மேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, மன்னார் மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எனப்படும் வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இதனால் போதுமான அளவு நீர் அருந்துமாறும் சாத்தியமான வேளைகளில் நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக களைப்பை ஏற்படுத்தும் வௌிப்புற செயற்பாடுகளை குறைத்துக் கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam