சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்: ஆட்டத்தை ஆரம்பித்த சந்திரிக்கா - செய்திகளின் தொகுப்பு
அரசாங்கத்தை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், குழுக்களுடன் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க நேற்றையதினம் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான குமாரவெல்கம, சம்பிக்க ரணவக்க , அனுரபிரியதர்சன யாப்பா, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட்ட பலரை முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
அரசாங்கத்தை எதிர்க்கும் கட்சிகள் மத்தியில் முன்னோக்கி நகர்வது குறித்து மாற்றுக்கருத்துக்கள் உள்ளதால், முன்னுரிமையளிக்க வேண்டிய விடயங்களை அடையாளம் காண்பதற்காகக் குழுவொன்றை நியமிக்குமாறு முன்னாள் அரச தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,