வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற பெரிய வெள்ளி ஆராதணை நிகழ்வுகள்
மன்னார்
வரலாற்றுச் சிறப்புமிக்க 'குற்றம் கழுவிய குருதி ' உடக்காலான திருப்பாடுகளின் ஆற்றுகை நிகழ்வானது மன்னார்(Mannar) பேசாலையில் இடம்பெற்றுள்ளது.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பாஸ் மண்டபத்தில் நேற்று (29) நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
திருப்பாடுகளின் காட்சி
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய அருட்பணி பேரவையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி உடக்கு பாஸ் நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டார்.
மேலும் மன்னார் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அடிகளார்,பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார்,ஆயரின் செயலாளர் அருட்தந்தை கரண் அடிகளார்,ஆகியோர் கலந்து கொண்டதோடு,பேசாலை பங்கு சமூகம் உள்ளடங்கலாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
கல்முனை
கல்முனை(Kalmunai) திரு இருதயநாதர் தேவாலயத்தின் பெரிய வெள்ளி ஆசந்தி பேரணி நிகழ்வு
செய்தி - sihan farook