திருகோணமலையில் இலஞ்சம் வாங்கிய வைத்தியசாலை அதிகாரி கைது
மரண சான்றிதழ் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக்கொண்ட மரண விசாரணை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை மற்றும் இறப்பு சான்றிதழ் தொடர்பான அறிக்கையை வழங்குவதற்காக 3000 ரூபா இலஞ்சம் பெற்ற திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்காலிக கடமையில் ஈடுபட்டிருந்த மரண விசாரணை அதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரால் நேற்று (22.06.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோமரங்கடவல, பக்மிகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மாமாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை கோரிய போது, மரண விசாரணைக்காக ஒரு தொகை இலஞ்சம் கேட்டுள்ளார்.
ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாடு
அதனையடுத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருகோணமலை, சோனக வீதியில் உள்ள சந்தேக நபரான மரண விசாரணை அதிகாரியின் இல்லத்தில் வைத்து அறிக்கையை வழங்க மீதி 3000/- ரூபா இலஞ்சம் கொடுக்கும் போதே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |