அடையாளம் காணாத முதியவர் சடலம்: பொதுமக்களின் உதவியை நாடும் வைத்தியசாலை நிர்வாகம்
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் பிரேத அறையில் முதியவர் ஒருவரின் சடலமொன்று வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா சுரங்கப்பாதைக்கு அருகில் கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த நிலையில் குறித்த சடலம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பொதுமக்களிடம் கோரிக்கை
குறித்த முதியவர் உயிரிழந்த நிலையில் சடலத்தினை மீட்டு அதே புகையிரதத்தில் எடுத்துச் செல்லப்பட்டு தலவாக்கலை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸாருக்கு தெரிவிக்கப்படதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த அடையாளம் காணாத முதியவரின் சடலத்தினை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று பிரேத அறையில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தில் உயிரிழந்த முதியவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் உயிரிழந்தவர் 55 முதல் 65 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், 5 அடி 1 அங்குல உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உயிரிழந்த ஆண் பச்சை நிற சட்டையும் கருப்பு நிற நீண்ட காற்சட்டையும் அணிந்துள்ளதாகவும் அதில் 4000 ரூபாய் பணமும் இருந்ததாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நானுஓயா பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன்படி வைத்தியசாலையில் சடலத்தை அடையாயம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்
நீர்கொழும்பு சிறை மோதல்: கைதிகளால் அடித்து நொருக்கப்பட்ட CCTV கமராக்கள் - தீவிரமடையும் சிஐடி விசாரணை
தமிழருக்கு சொந்தமான பாரிய பீச் ஹோட்டல் எரியூட்டப்பட்ட கொடூரம்! மைக்கேல் ராபர்ட்ஸ் என்பவரால் வெளியிட்டுள்ள தகவல்கள்
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan