மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பலியான பாடசாலை மாணவன்.. பலரை கைது செய்ய அதிரடி உத்தரவு
ஹொரணையில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் பலரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது.
ஹொரணையில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றிருந்த போது, காரில் மோதி குறித்த உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து, இடம்பெற்ற மாணவனின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது, உயிருக்கு ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறுதிச் சடங்கில் நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர்கள், எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை பிரதான நீதவான் சந்தன கலன்சூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஹொரணை - பல்லப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த கவிந்து தில்ஷான் (21) மற்றும் வல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மனுஷ ஆதித்யா (22) ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது, பொதுச் சாலையில் ஒரே சக்கரத்தில் மோட்டார் சைக்கிளை கவனக்குறைவாக ஓட்டியதன் காரணமாக போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றின் தீர்ப்பு
அத்துடன், இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது ஒரே சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய மற்ற இளைஞர்களையும், உயிரிழந்த மாணவன் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேரையும் உடனடியாக கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சட்டவிரோதமாக இத்தகைய போட்டிகளை ஏற்பாடு செய்தவர்களுக்கும், நிகழ்வை புகைப்படம் மற்றும் காணொளியாக பதிவு செய்தவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் பணித்துள்ளது.
இ CID அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இறுதிச் சடங்கு ஊர்வலங்களில் ஒழுங்கீனமாக நடந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எந்த விதமான சலுகையும் வழங்க வேண்டாம் என அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.