வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முற்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மடக்கிப் பிடிப்பு
களுத்துறை, ஹொரணை - கிரேஸ்லேண்ட் தோட்டத்தில் நேற்று (05) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு
அவர் ஹொரணை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு நேற்று (05) பிற்பகல் அவர் டுபாய் செல்ல முற்பட்டபோது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், அவருக்கு எதிராக நீதிமன்றத்தால் முன்னதாகவே வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஹொரணை – கிரேஸ்லேண்ட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்தத் துப்பாக்கிச் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதன்போது படுகாயமடைந்த நபர் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார் இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan