பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இளைஞனுக்கு கிளிநொச்சியில் கௌரவிப்பு (Photos)
பாக்கு நீரினையை நீந்திக் கடந்த மட்டக்களப்பை சேர்ந்த இளைஞன் தேவேந்திரன் மதுசிகனுக்கு கிளிநொச்சி நீர் விளையாட்டுக் கழகம் 50 ஆயிரம் நிதியுதவியை வழங்கியதோடு, அவரை பாராட்டி சான்றிதழையும் வழங்கி வைத்தனர்.
தேவேந்திரன் மதுசிகனின் தேவைகள் கருதி இந்த கௌரவிப்பு நேற்று (15.08.2023) இடம்பெற்றுள்ளது.
தனியே கல்வி மட்டும் வாழ்க்கை அல்ல அதனையும் தாண்டி நிறைய உண்டு எனவே மாணவர்கள் கல்வியோடு விளையாட்டு, கலைகள் என தங்களை வளர்த்துக்கொள்வதோடு நல்ல பண்புகளையும் ஒழுக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஊக்கமுட்டும் வகையில் கருத்து
கிளிநொச்சி நீர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த சில வாரங்களாக நீச்சல் பயிற்சிகளை வழங்கி வரும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பு பஞ்சரட்ணம் சந்திப்பதற்காக வருகை தந்த தேவேந்திரன் மதுசிகன் கிளிநொச்சி விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் மாணவர்களிடம் ஊக்குமுட்டும் வகையில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி, கிளிநொச்சி நீர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் வைத்தியர் மா. தவராசா, அதிபர் பங்கையற்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.