வடமராட்சி கிழக்கிலும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு..!
இலங்கை தமிழரசு கட்சியின் மாவீரர் பெற்றோர் உரித்துடையோரை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி பொது மண்டபத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலமையில் நேற்றையதினம்(26) இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் மங்கல வாத்தியம் முழங்க விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு பொதுச் சுடரினை உடுத்துறையை சேர்ந்த மாவீரரின் தந்தை பொன் சிவலிங்கம் எற்றிவைத்ததை தொடர்ந்து பொது ஈகைச்சுடரினை கட்டைக்காடு முள்ளியனைச் சேர்ந்த மாவீரர் கயல் மற்றும் கடல் ஆகியோரின் தாயார் ஏற்றிவைத்தார்.
மாவீரர் பெற்றோர்
அதனை தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவ படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மாவீர்களின் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சி பதில் செயலாளர் எம் ஏ சுமந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ், உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.
இதில் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர்கள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள், ஜநாயக தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள், ஈழமக்கள் ஜனநாயக கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு
இதேவேளை, மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானாவில் 2009 ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் முதன்முதலாக மாவீரர் பெற்றோர் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றையதினம் (26.11.2025) மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

மாவீரர் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு சிறுவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுச்சுடரினை மாவீரரின் பெற்றோர் ஜோசப் முனியம்மா ஏற்றி வைத்ததனை தொடர்ந்து மாவீரர்களின் பொது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது கலை நிகழ்வுகளும் மாவீரர்களின் வீரம் தியாகம் அர்ப்பணிப்பு தொடர்பிலான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கப்பட்டன. பாரதிபுரம் வட்டாரத்தில், றெட்பானா மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில், முன்னாள் போராளியும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினருமான கு.அகிலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முன்னாள் போராளியும் , புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளருமான வே.கரிகாலன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக தகவல்- சான்










ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan