இலங்கையில் ஹீரோவாக மாறிய நடத்துனர் : நெகிழ்ச்சியை ஏற்படுத்திய செயல்
கேகாலையில் பேருந்து தவற விடப்பட்ட தங்க நகையை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புலத்கொஹுபிட்டிய வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தங்க நகையுடன் பொதியை மறந்து விட்டுச் சென்றுள்ளார்.
சுமார் ஆறரை லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் அடங்கிய பை ஒன்று அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நடத்துநரின் செயல்
கடந்த 26 ஆம் திகதி காலை கேகாலையில் இருந்து புலத்கொஹுபிட்டிய நோக்கி பயணித்த பேருந்தில், நபர் பையை மறந்து விட்டு சென்றுள்ளார்.

அதன் உரிமையாளர் இல்லாதததால் அதன் நடத்துனர் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிக்கு அறிவித்து கேகாலை போக்குவரத்து சபை பாதுகாப்பு பிரிவிடம் கையை ஒப்படைத்துள்ளார்.
பின்னர், அதிகாரிகள் பையில் இருந்த தொலைபேசி எண்ணை பயன்படுத்தி உரிமையாளரைக் கண்டுபிடித்து, அவரை வரவழைத்துள்ளனர்.
தொழிநுட்ப கோளாறு
அங்கு அவரிடம், தங்க ஆபரணங்கள் அடங்கிய பையை சம்பந்தப்பட்ட நடத்துனர் ஒப்படைத்துள்ளார்.

முன்னதாக ஒரு சந்தர்ப்பத்தில், பேரூந்து ஒன்று திடீரென தொழிநுட்பக் கோளாறு காரணமாக புலத்கொஹுபிட்டிய பேருந்து நிலையத்தில் பயணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சாரதியின்றி பயணித்தது.
இதன் போதும் குறித்த நடத்துனரே பலரின் உயிரை காப்பாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam