நெதர்லாந்து துறைமுகத்தில் நங்கூரமிட்ட ஹோண்டியஸ் கப்பல்!
ஹண்டா வைரஸ் எனப்படும் கொடிய வைரஸ் பாதிப்புக்குள்ளான 'எம்வி ஹோண்டியஸ்' என்ற சுற்றுலா சொகுசுக் கப்பல், முழுமையான கிருமிநாசினிப் பணிகளுக்காக நெதர்லாந்தின் ரோட்டர்டாம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இக்கப்பலில் பயணித்த பயணிகள் அனைவரும் ஏற்கனவே வெவ்வேறு இடங்களில் இறக்கிவிடப்பட்ட நிலையில், தற்போது 25 ஊழியர்கள் மற்றும் 2 மருத்துவப் பணியாளர்களுடன் இக்கப்பல் நெதர்லாந்து வந்து சேர்ந்துள்ளது.
தற்போது கப்பலில் உள்ள யாருக்கும் இதற்கான அறிகுறிகள் இல்லை என அதன் மாலுமி தெரிவித்துள்ளார்.
வைரஸ் பாதிப்பு
தென் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளான போர்த்துகல் தம்பதியினர் உட்பட மொத்தம் 3 பயணிகள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

மேலும், கப்பலில் பயணித்தவர்களில் இதுவரை 11 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கப்பல் ஊழியர்கள் அனைவரும் நெதர்லாந்து துறைமுகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள கன்டெய்னர்களில் உடனடியாகக் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆய்வு
நெதர்லாந்து பொதுச் சுகாதார வழிகாட்டுதலின்படி கப்பல் முழுவதும் தீவிரமாகத் தூய்மைப்படுத்தப்பட்டு, ஆய்வு செய்யப்பட்ட பின்னரே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த வைரஸ் பரவல் ஆபத்து மிகவும் "குறைவானதே" என்று மதிப்பீடு செய்துள்ளதுடன், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan