ஹொலிவுட் நடிகர் ரசல் பிராண்ட் மீது பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு
ஹொலிவுட் நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ரசல் பிராண்ட் (Russell Brand) மீது, பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக மேலும் இரண்டு புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸ் தெரிவித்துள்ளது.
50 வயதான ரசல் பிராண்ட் மீது ஏற்கனவே நான்கு பெண்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஐந்து குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது மேலும் இரண்டு பெண்கள் முன்வைத்த முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு
2009 ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, எதிர்வரும் வரும் 2026 ஜனவரி 20ஆம் திகதி அவர் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 1999 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் மத்திய லண்டன் மற்றும் போர்ன்மவுத் பகுதிகளில் நான்கு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் முறைப்பாடுகளில், அவர் குற்றமற்றவர் என ஏற்கனவே வாதிட்டுள்ளார்.
இது தொடர்பான பிரதான விசாரணை 2026 ஜூன் 16ஆம் திகதி சவுத்வோர்க் கிரவுன் நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது.
2023ஆம் ஆண்டில் சண்டே டைம்ஸ் மற்றும் செனல் 4 டிஸ்பாட்சஸ் (Dispatches) வெளியிட்ட புலனாய்வுச் செய்திகளைத் தொடர்ந்து, ரசல் பிராண்ட் மீதான இந்த குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பொலிஸார் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam