வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை : நான்கு மாகாண ஆளுநர்கள் விடுத்துள்ள அறிவிப்பு
புதிய இணைப்பு
எதிர்வரும் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னி்ட்டு இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
எதிர்வரும் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறித்த விடுமுறை வழங்கப்படுவதாக குறித்த மாகாணங்களின் ஆளுநர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த, ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளிலும், ஆரம்பப்பிரிவுகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்பட்டன.
இந்நிலையில், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக 10, 11, 12, 13 ஆகிய வகுப்புக்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam