அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து! வெளியானது அறிவிப்பு
உர விநியோகத்தை எளிதாக்கும் வகையில் விவசாய அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களின் விடுமுறையும் ஜூலை 06 முதல் 15 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசினால் வழங்கப்பட்ட 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் ஏற்றிச் செல்லும் கப்பல் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
விவசாயிகளுக்கு உரம் விநியோகம்
எதிர்வரும் ஜுலை 7ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள கமநல அபிவிருத்தி நிலையங்களுக்கு இந்த உரம் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் கமநல சேவைகள் திணைக்களம், தேசிய உர செயலகம், இலங்கை உர நிறுவனம் மற்றும் வர்த்தக உர நிறுவனம் ஆகிய அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.