விடுதியை திடீரென முற்றுகையிட்ட பொலிஸார் - இரண்டு பெண்கள் கைது
கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவின் கடலதெனிய பகுதியில் உள்ள ஒரு விடுமுறை விடுதியில் இரகசியமாக நடத்தப்பட்டு வந்த விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பெண்கள் கைது
இந்த விடுதியின் நிர்வாகத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரும், தகாத செயலில் ஈடுபடுவதற்காக தங்கியிருந்த 2 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிலிமத்தலாவையைச் சேர்ந்த 68 வயதுடையவர் என்றும், பெண்கள் 35 மற்றும் 48 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் தெவனகல மற்றும் முருத்தலாவையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
